சிக்கிமில் சோ-லா மற்றும் டோக்-லா ஆகியவை பாரத் ரன்பூமி தரிசன முன்னெடுப்பின் கீழ் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளன.
டோக்-லா (டோக்லாம்) இந்திய-சீனா-பூடான் முச்சந்திப்புக்கு அருகிலுள்ள சும்பிப் பள்ளத்தாக்கில் 13,780 அடி உயரத்தில் அமைந்துள்ளது என்பதோடு இங்கு 2017 ஆம் ஆண்டில் ஒரு இராணுவ மோதல் நடைபெற்றது.
17,780 அடி உயரத்தில் அமைந்துள்ள சோ-லா பகுதியில் 1967 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஒரு மோதல் நடைபெற்றது.
எல்லைப் பகுதிகள் சுற்றுலா மற்றும் உள்ளூர் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக எழுச்சிமிகு கிராமங்கள் திட்டத்தின் கீழ் இந்தத் தளங்கள் உருவாக்கப் பட்டுள்ளன.
ஏற்கனவே சுற்றுலாத் தலமாக இருக்கும் நாது-லா, சிக்கிமில் ரன்பூமி தரிசன முன்னெடுப்பின் கீழ் சேர்க்கப்பட்டுள்ள மற்றொரு தளமாகும்.