TNPSC Thervupettagam

சிக்குன்குனியா தடுப்பு மருந்து

June 25 , 2019 2188 days 736 0
  • சிக்குன்குனியா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக நோய்த் தடுப்பு மருந்தினை வாழ்க்கை அறிவியல் நிறுவனம் (ILS - Institute of Life Sciences) வெற்றிகரமாக மேம்படுத்தியுள்ளது.
  • சிக்குன்குனியா என்பது தொற்று ஏற்பட்ட (பாதிக்கப்பட்ட) கொசுக்கள், அதிலும் குறிப்பாக ஏடிஸ் ஏஜிப்தி மற்றும் எடிஸ் அல்போபிக்டஸ் ஆகியவற்றினால் மனிதர்களுக்குப் பரவும் ஒரு வைரஸ் நோயாகும்.
  • சிக்குன்குனியா என்ற பெயரானது தான்சானியாவில் பேசக்கூடிய கிமகொண்டி மொழியில் உள்ள வினைச் சொல்லிலிருந்து உருவாகியது.
  • இதன் பொருள் “திருகப்பட்டதாக மாறுதல்” என்பதாகும்.
ILS
  • ILS ஆனது 1984 ஆம் ஆண்டில் ஒடிசாவில் உருவாக்கப்பட்டது.
  • இது உயிரித் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் வாழ்க்கை அறிவியலில் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான உயர்கல்வியின் ஒரு தன்னிச்சையான நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்