TNPSC Thervupettagam

சிங்கங்கள் கணக்கெடுப்பு 2025

May 24 , 2025 21 days 108 0
  • குஜராத்தின் 11 மாவட்டங்களில் 16வது ஆசிய சிங்கக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
  • 2025 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, குஜராத்தில் உள்ள ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கையானது 674 லிருந்து 891 ஆக உயர்ந்துள்ளது.
  • தற்போது புதிய புள்ளிவிவரங்கள் ஆனது கடந்த ஐந்து ஆண்டுகளில் 217 சிங்கங்களின் அதிகரிப்பைக் குறிக்கின்றன அல்லது அவற்றின் எண்ணிக்கையில் சுமார் 32 சதவீதத்திற்கும் அதிகமான அதிகரிப்பினைக் குறிக்கின்றன.
  • கடைசி கணக்கெடுப்பானது 2020 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.
  • ஒரு தனித்துவமான துணை இனமான ஆசிய சிங்கங்கள் குஜராத்தின் கிர் தேசியப் பூங்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மட்டுமே காணப்படுகின்றன.
  • கிர் வனவிலங்குச் சரணாலயம் மற்றும் பானியா வனவிலங்குச் சரணாலயம் ஆகியன இதன் பெரும்பான்மை எண்ணிக்கையைக் கொண்டுள்ளது.
  • அமெரேலி மாவட்டம் 257 சிங்கங்களுடன் அதிக எண்ணிக்கையைக் கொண்டுள்ளது.
  • போர்பந்தர் அருகே பர்தா வனவிலங்குச் சரணாலயம் சிங்க வசிப்பிடத்தைக் கொண்ட ஒரு புதிதாக நிறுவப் பட்டப் பகுதியாக மாறியுள்ளது.
  • எனவே இது சிங்கங்களுக்கான இரண்டாவது வசிப்ப்டமாக மாறியுள்ளது.
  • 1879 ஆம் ஆண்டிற்குப் பிறகு இதுவே முதன் முறையாகும்.
  • 2025 கணக்கெடுப்பானது ஜெட்புர் மற்றும் பாப்ரா-ஜஸ்தான் ஆகிய பகுதிகளின் அருகே ஒரு புதிய தொலைதூர அளவிலான எண்ணிக்கைகளைக் கொண்டுள்ளது.
  • இந்த வருடக் கணக்கெடுப்பானது இரண்டு வருடங்களாக நடத்தப் படுகின்ற புலிகள் கணக்கெடுப்பினைப் போலல்லாமல் வெறும் மூன்று நாட்களில் நடத்தி முடிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்