சிங்கப்பூர் அரசுடனான ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகச் சேவை கூட்டிணைவு
February 25 , 2023 881 days 410 0
இந்தியாவின் ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகச் சேவை மற்றும் சிங்கப்பூரின் PayNow ஆகியவை நிகழ்நேர பண வழங்கீட்டுச் சேவை இணைப்புக்காக அதிகாரப் பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூர் தற்போது எல்லை கடந்த நேரடி (P2P) பண வழங்கீட்டு வசதிகள் தொடங்கப் பட்ட முதல் நாடாக மாறியுள்ளது.
இது சிங்கப்பூரில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கு, குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் /மாணவர்களுக்கு உதவச் செய்வதோடு, எண்ணிம மயமாக்கலின் பலன்களை அவர்களிடம் சேர்க்க உதவும்.