TNPSC Thervupettagam

சிங்கவால் குரங்கு சரணாலய வழக்கு

March 14 , 2026 3 days 51 0
  • சாராவதி பள்ளத்தாக்கு சிங்கவால் குரங்கு சரணாலயம் மற்றும் அதன் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தில் அனைத்து தரைநிலை நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • சரணாலயத்திற்குள் 2,000 மெகாவாட் சாராவதி நீரேற்ற சேமிப்புத் திட்டம் மற்றும் கல்கட்டே பாலத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்துத் தொடரப்பட்ட பொதுநல மனுவின் (PIL) விசாரணையின் போது இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
  • இந்தச் சரணாலயம் மேற்குத் தொடர்ச்சி மலைக்கே உரித்தான, அழியும் நிலையில் உள்ள சிங்கவால் குரங்கின் பெயரால் அழைக்கப்படுகிறது.
  • வனவிலங்குச் சரணாலயங்களுக்குள்ளான நடவடிக்கைகள் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972ன் கீழ் கட்டுப்படுத்தப்படுகின்றன; இது வனவிலங்கு வாழ்விடங்களை அழிப்பதையோ அல்லது திசை திருப்புவதையோ தடுக்கிறது என்று நீதிமன்றம் கூறியது.
  • மேற்குத் தொடர்ச்சி மலைகள் யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளமாகவும், உலகளாவியப் பல்லுயிர் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் அங்கீகரிக்கப் பட்டு உள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்