January 7 , 2026
2 days
44
- ஆயுஷ் அமைச்சகம் (ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி) 9வது சித்த மருத்துவ தினத்தைக் கொண்டாடியது.
- தேசிய மற்றும் மாநில சித்த மருத்துவ நிறுவனங்களின் ஆதரவுடன் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
- அகத்திய முனிவரின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 06 ஆம் தேதியன்று சித்த மருத்துவ தினம் அனுசரிக்கப்படுகிறது.
- அகத்திய முனிவர் சித்த மருத்துவ முறையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
- 2026 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Siddha for Global Health" என்பதாகும்.
- தமிழ்நாட்டில் தோன்றிய சித்த மருத்துவம் இந்தியாவின் பாரம்பரிய சுகாதார அமைப்புகளின் ஒரு பகுதியாகும்.
Post Views:
44