சித்திரவதைக்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் மீதான ஐக்கிய நாடுகள் தீர்மானம்
July 9 , 2019 2316 days 807 0
சமீபத்தில் ரோமானியாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபைத் தீர்மானம் மீதான ஒட்டெடுப்பிலிருந்து இரஷ்யா மற்றும் இதர 42 நாடுகளுடன் இணைந்து இந்தியா வெளியேறியுள்ளது.
இந்தத் தீர்மானம் தூக்குத் தண்டனை மற்றும் சித்திரவதை ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்படும் பொருட்களின் வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான வழிகள் குறித்து ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தியா ஓட்டெடுப்பிலிருந்து வெளியேறியதற்கான காரணங்கள் பின்வருமாறு
இது இந்தியாவில் “அரிதிலும் அரிதான” வழக்குகளில் மட்டும் தூக்குத் தண்டனை வழங்க அனுமதிக்கும் இந்தியச் சட்டத்திற்கு எதிராக உள்ளது.
தூக்குத் தண்டனையை சித்திரவதைக்கு இணையாக வைப்பதற்கான முயற்சியின் காரணமாக இந்த ஓட்டெடுப்பில் இருந்து இந்தியா விலகியுள்ளது.