கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஒரு நபர், பட்டிலிடப்பட்ட சாதியினர் அந்தஸ்தைக் கோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மாதிகா சமூகத்தைச் சேர்ந்த ஒரு போதகர் தொடர்பான 'சிந்தாடா ஆனந்த் Vs ஆந்திரப் பிரதேச அரசு' என்ற வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தற்போதைய சட்டத்தின்படி, பட்டிலிடப்பட்ட சாதியினர் அந்தஸ்து என்பது இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் பௌத்தர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று நீதிமன்றம் கூறியது.
இந்திய அரசியலமைப்பின் சரத்து 341-இன் கீழ் பட்டிலிடப்பட்ட சாதியினர் பற்றி வரையறுக்கப் பட்டுள்ளன.
பல தலித் கிறிஸ்தவர்கள் தங்களைப் பட்டிலிடப்பட்ட சாதியினர் பிரிவில் சேர்க்கக் கோரி வருவதால் இந்த விவகாரம் முக்கியத்துவம் பெறுகிறது.
முன்னதாக ரங்கநாத் மிஸ்ரா ஆணையம், மதமாற்றம் செய்த தலித்துகளுக்கும் பட்டிலிடப் பட்ட சாதியினர் அந்தஸ்தை நீட்டிக்க பரிந்துரை செய்திருந்தது.