ராட்டில் நீர்மின் நிலையம் மற்றும் கிஷன்கங்கா நீர்மின் நிலையம் ஆகியவை தொடர்பான பிரச்சனைகளை அறிக்கை அனுப்பியதற்கான காரணம் என்று இந்தியா குறிப்பிடுகிறது.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஆனது, இந்திய அரசுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் இடையே 1960 ஆம் ஆண்டில் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்படி, பியாஸ், ரவி மற்றும் சட்லெஜ் ஆகிய நதிகளின் நீர் இந்திய அரசின் கட்டுப்பாட்டிலும், சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகிய நதிகளின் நீர் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.
இந்த நதிநீருக்கான அணுகல் வசதியில் இந்தியாவுக்கு 20 சதவீதமும், பாகிஸ்தானுக்கு 80 சதவீதமும் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அரசினைப் பொறுத்தவரை, இந்த ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் "இணக்கம் அற்றதாக" உள்ளது.
அதாவது உடன்படிக்கைக்கு உடன்பட மறுப்பது என்பது இதன் பொருளாகும்.
இதனால், ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யுமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா அறிக்கை அனுப்பியுள்ளது.
ராட்டில் மின் நிலையமானது செனாப் ஆற்றில் அமைந்துள்ளது.
அப்போதையப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் 2013 ஆம் ஆண்டில் இதற்கான அடிக்கல்லினை நாட்டினார்.
2018 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் எதிர்ப்புகளை எழுப்பியப் போதிலும், உலக வங்கி ஆனது இந்தத் திட்டத்தை முன்னோக்கி மேற்கொள்ளுமாறு இந்தியாவிற்கு அனுமதி வழங்கிய பிறகு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.