ஆராய்ச்சியாளர்கள், நீரிழிவு நோய் சார்ந்த காயங்களுக்கு ஒரு சாத்தியமான சிகிச்சையாக சினாபிக் அமிலத்தை அடையாளம் கண்டுள்ளனர்.
வாய்வழியாக சினாபிக் அமிலத்தை வழங்குதல் SIRT1 பாதையை செயல்படுத்துவதன் மூலம் காயங்களைக் குணப்படுத்துவதை துரிதப்படுத்துகிறது என்று ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.
SIRT1 பாதையானது, திசுக்களை சீர் செய்தல் மற்றும் திசு வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பொறுப்பினைக் கொண்ட அமைப்பாகும்.
நீரிழிவு சார்ந்த காயங்களைக் குணப்படுத்துவதில் இந்த சேர்மத்தின் வாய்வழி உட் செலுத்தல் செயல்திறனை நிரூபிக்கும் முதல் உலகளாவிய ஆய்வு இதுவாகும்.
இந்தக் கண்டுபிடிப்பு ஆனது உறுப்புகளை துண்டிப்பதைக் குறைக்கவும், நீரிழிவு சார்ந்த கால் புண்களிலிருந்து மீள்வதை விரைவுபடுத்தவும் உதவும்.