தென்கொரியா நாடானது சினின்சியோன் பிட்டிரீம் எரிபொருள் கல மின் நிலையத்தின் நிறைவு விழாவை அறிவித்தது.
மொத்தம் 7 8MW திறனுடைய இந்த மின் நிலையமானது POSCO எனர்ஜி மற்றும் தூசன் பியூல் செல் ஆகியவை வழங்கிய எரிபொருள் கலன்களைக் கொண்டு 2017 ஆம் ஆண்டு முதல் 4 கட்டங்களாக கட்டப்பட்டது.
இது தற்போது செயல்பாட்டிலுள்ள உலகின் மிகப்பெரிய எரிபொருள் கலமின் நிலையமாகும் (fuel cell power plant).
மற்ற மின் உற்பத்தி மையங்களைப் போலல்லாமல், ஹைட்ரஜன் எரிபொருள் கலன்கள் அதிக வெப்பநிலையின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யாது என்பதால் இது குறைந்த அளவு நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் சல்பர் ஆக்சைடுகளை மட்டுமே வெளியிடும்.