சின்னங்கள் மற்றும் பெயர்கள் (தவறான பயன்பாட்டைத் தடுத்தல்) சட்டம், 1950
May 29 , 2025 8 days 66 0
தனிநபர்கள்/ தனியார் நிறுவனங்கள் ஆகியவை இந்திய ஆணழகர்/மிஸ்டர் இந்தியா, தென்னிந்திய ஆணழகர்/மிஸ்டர் சவுத் இந்தியா போன்ற பட்டங்களை வழங்குவதைத் தடுப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
உடற்கட்டுக் கோப்பு வீரர்கள் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் இத்தகையப் பட்டங்கள், 1950 ஆம் ஆண்டின் சின்னங்கள் மற்றும் பெயர்கள் (தவறான பயன்பாட்டைத் தடுத்தல்) என்ற சட்டத்தின் 3வது பிரிவினை எந்த வகையிலும் மீறாது என்றும் அது கூறியது.
1950 ஆம் ஆண்டு சட்டம் ஆனது, எந்தவொரு வர்த்தகம், வணிகம், தொழில் அல்லது தொழில்முறை, அல்லது எந்தவொரு காப்புரிமையின் பேரில், அல்லது எந்தவொரு வர்த்தக முத்திரை அல்லது வடிவமைப்பில் அல்லது இச் சட்டத்தின் அட்டவணையில் குறிப்பிடப் பட்டுள்ள எந்தவொரு பெயர் அல்லது சின்னம் அல்லது அதன் எந்தவொரு வண்ணமயமான சாயலிலும், மத்திய அரசின் முன் அனுமதியின்றி, நாட்டின் பெயர் அல்லது சின்னத்தைப் பயன்படுத்துவதைத் தடை செய்கிறது.