ரஷ்ய நாடானது சிபிர் எனப்படும் அணுசக்தியினால் இயங்கக்கூடிய பனிக்கட்டிகளை உடைக்கும் ஒரு புதிய கப்பலை வெளியிட்டுள்ளது.
ஆர்க்டிக் வழியாக ஆண்டு முழுவதும் கப்பல் போக்குவரத்து இயங்கச் செய்வதற்காக வேண்டி வடக்குக் கடல் பாதையை ஏதுவானதாக வைப்பதற்கான முக்கிய பனிக்கட்டி உடைப்பு கப்பல்கள் என்ற ஒரு பிரிவில் இந்தக் கப்பல் சேர்க்கப்பட்டதன் மூலம் இந்தியக் கப்பல்களின் அதிகப் படியான இயக்கத்திற்கு இது வழிவகை செய்யும்.