இன்ஃபோசிஸ் நிறுவனத்தினுடைய முன்னாள் தலைமை நிர்வாக இயக்குநரான S.D. சிபு லால் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பணிக்குழுவின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.
இந்தப் பணிக்குழுவானது அரசின் ‘கர்மயோகி திட்டத்தின்’ மூலம் முக்கிய ஆட்சிப் பணி சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு வேண்டி அரசிற்கு உதவி வழங்கச் செய்வதற்காக அமைக்கப் பட்டுள்ளது.
சிக்சா லோகம் எனும் ஒரு அமைப்பின் நிறுவனரும் இன்ஃபோசிஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான சிபு லாலைத் தவிர கோவிந்த் ஐயர் மற்றும் பங்கஜ் பன்சால் ஆகியோரும் இந்தப் பணிக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
மத்திய அரசானது தேசிய ஆட்சிப்பணி திறன் மேம்பாட்டுத் திட்டமான கர்மயோகி திட்டத்திற்குச் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
நாட்டின் அனைத்து ஆட்சிப் பணிகளுக்குமான விதிமுறை அடிப்படையிலான பயிற்சிக்குப் பதிலாக பணிசார்ந்த பயிற்சிமுறையை கையாளுவதற்கான ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே இந்த திட்டமானது தொடங்கப் பட்டுள்ளது.