சிமெண்ட் கலவையில் ஒற்றைப் பயன்பாட்டு முகக்கவசங்களின் பயன்பாடு
May 4 , 2022 1356 days 632 0
அதிக நாட்கள் நீடிக்கக் கூடிய மற்றும் வலிமையான கற்காரையினை உருவாக்கச் செய்வதில், சிமெண்ட் கலவையில் ஒருமுறை உபயோகித்துத் தூக்கி எறியப்படும் முகக் கவசங்களைப் பயன்படுத்துவதற்கான ஒரு வழிமுறையை ஆராய்ச்சியாளர்கள் செயல் விளக்கம் செய்து காட்டினர்.
முகக்கவசம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இழைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப் பட்ட சிமெண்ட் கலவையானது, பொதுவாகப் பயன்படுத்தப்படும் சிமெண்டை விட 47 சதவீதம் வலிமையானது.
மறுசுழற்சி செய்யப்படாவிட்டால், ஒருமுறை உபயோகித்துத் தூக்கி எறியப்படும் முகக் கவசங்கள் பல ஆண்டுகளுக்கு மேல் சிதையாமல் உள்ளதால் அவை சுற்றுச் சூழலுக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.