இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் 25-வது கடற்படை கூட்டுப் பயிற்சியான சிம்பெக்ஸ் இந்தியாவின் வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் நவம்பர் 10 முதல் 21 வரை நடைபெறவுள்ளது.
சிம்பெக்ஸ் என்பது சிங்கப்பூர் - இந்தியா கடல்சார் இருதரப்பு பயிற்சி (Singapore-India Maritime Bilateral Exercise) என்பதன் சுருக்கமாகும்.
சிம்பெக்ஸ் 2018 ஆனது வெள்ளி விழா ஆண்டைக் குறிக்கிறது. மேலும் 1994 முதல் நடந்து வரும் இப்பயிற்சியில் இவ்வருடப் பயிற்சியானது அளவிலும் தன்மையிலும் மிகப்பெரிய பதிப்பாக இருக்கும்.
இந்த பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் ஏவுகணை மற்றும் துப்பாக்கிகளின் எண்ணிக்கையானது இந்தியக் கடற்படையால் இதுவரை எந்தவொரு வெளிநாட்டுக் கடற்படையுடனும் மேற்கொள்ளப்படாத அளவில் அதிக எண்ணிக்கையில் இருக்கும்.