TNPSC Thervupettagam

சிம்லா ஒப்பந்தம் இடைநிறுத்தம்

April 27 , 2025 3 days 32 0
  • சிந்து நதி நீர் ஒப்பந்தத்தினை இந்தியாவானது நிறுத்தி வைத்ததையடுத்து, சிம்லா ஒப்பந்தத்தினை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
  • 1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போர் ஆனது, வங்காளதேசம் உருவாவதற்கு வழி வகுத்த ஒரு குறிப்பிடத்தக்க மோதலாகும்.
  • சிம்லா ஒப்பந்தம் ஆனது, இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும் பாகிஸ்தான் அதிபர் சுல்பிகர் அலி பூட்டோவுக்கும் இடையே கையெழுத்தானது.
  • 1971 ஆம் ஆண்டு போருக்குப் பிறகு, 1972 ஆம் ஆண்டு ஜூலை 02 ஆம் தேதியன்று சிம்லாவில் இது கையெழுத்திடப்பட்டது.
  • இந்த ஒப்பந்தத்தின்படி, ஜம்மு-காஷ்மீரில் போர் நிறுத்த எல்லை வரம்பானது எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு என மறுவரையறை செய்யப்பட்டது என்ற ஒரு நிலைமையில் இரு நாடுகளும் அதனை ஒருதலைப் பட்சமாக மாற்றக் கூடாது என்று உறுதியளித்தன.
  • அந்தப் போரின் போது கைப்பற்றப்பட்ட சுமார் 13,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை இந்தியா திருப்பி ஒப்படைத்தது.
  • இருப்பினும், சோர்பட் பள்ளத்தாக்கில் துர்டுக் மற்றும் தியாக்சி உள்ளிட்ட பல உத்தி சார் பகுதிகளை இந்தியா தக்க வைத்துக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்