சியாங் பள்ளத்தாக்கில் புதிய வண்ணத்துப்பூச்சி இனங்கள்
November 11 , 2025 8 days 45 0
இந்தியாவில் முதல் முறையாக அருணாச்சலப் பிரதேசத்தின் சியாங் பள்ளத்தாக்கில் இருந்து ஆறு வண்ணத்துப் பூச்சி இனங்கள் பதிவு செய்யப்பட்டன.
இந்த இனங்களாவன லிட்டின் ஓனிக்ஸ் (ஹொராகா தகனாமி), திபெத்திய ஜங்கிள் குயின் (ஸ்டிச்சோஃப்தால்மா நியூமோஜெனி ரென்கிங்டுயோஜி), மற்றும் திபெத்திய டியூக் (யூதாலியா ஜாக்சிடுன்சுய்) என்பதோடு, மேலும் லாவோஸ், வியட் நாம் மற்றும் தென்கிழக்கு திபெத்தில் மட்டுமே உள்ள முன்னர் அறியப்பட்ட மூன்று இனங்கள் ஆகியவையாகும்.
இந்தக் கண்டுபிடிப்புகள் திபெத்தின் யார்லுங் சாங்போ நதிக்கும் இந்தியாவின் பிரம்ம புத்திரா நதிப் படுகைக்கும் இடையிலான சுற்றுச்சூழல் தொடர்பை எடுத்துக் காட்டுகின்றன.