சிரியா நெருக்கடி நிலை குறித்த 4 நாடுகள் உச்சி மாநாடு
October 25 , 2018 2493 days 787 0
சிரியாவில் நடக்கும் சச்சரவுகள் மற்றும் அங்கு நடக்கும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒரு நீடித்த தீர்வுக்கான முயற்சிகள் குறித்து விவாதிப்பதற்காக துருக்கியின் இஸ்தான்புல்லில் சிரியாவின் நெருக்கடி நிலை குறித்த 4 நாடுகள் உச்சி மாநாட்டை துருக்கி நடத்தவுள்ளது.
இந்த உச்சி மாநாடானது துருக்கி, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ரஷ்ய நாட்டின் தலைவர்களுக்கிடையே நடைபெறும்.
பின்னணி
சிரியாவின் அதிபரான பஷார் ஆசாத்தின் அரசுக்கு ரஷ்யா முக்கிய ஆதரவாளராக உள்ளது. அதே வேளையில் துருக்கி நாடானது கிளர்ச்சியாளர்களுக்கு உதவி வருகிறது.