சனி மற்றும் யுரேனஸுக்கு இடையில் அமைந்துள்ள சிரோன் எனப்படும் ஒரு பனிக் கட்டி நிறைந்த சென்டாரைச் சுற்றி விரிந்து வரும் ஒரு வளைய அமைப்பை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
உள் வளையங்கள் சிரோனின் மையத்திலிருந்து தோராயமாக 273 கிமீ, 325 கிமீ மற்றும் 438 கிமீ தொலைவில் அமைந்துள்ளதுடன் நான்கு தனித்துவமான வளையங்கள் அடையாளம் காணப்பட்டன.
நான்காவது, வெளிப்புற வளையம் ஆனது சுமார் 1,400 கிமீ தொலைவில் கண்டறியப்பட்டது மேலும் இதன் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக இது மேலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சிரோனின் வளையங்கள் நீர், பனி மற்றும் சிறிய பாறைப் பொருட்களால் ஆனதாகத் தெரிகிறது, இது கடந்த கால மோதல்கள் அல்லது நிலவு உருவாக்கக் குப்பைகளிலிருந்து உருவாகியிருக்கலாம்.
சிரோன் ஆனது வளையங்களுடன் கூடிய சாரிக்லோ, ஹௌமியா மற்றும் குவோர் ஆகிய மற்ற மூன்று சிறிய சூரிய மண்டல அமைப்புகளின் பட்டியலில் இணைகிறது.