சிறந்த 50 சுற்றுலாத் தலங்கள் - 'சவால் சார்ந்த நடவடிக்கை'
February 11 , 2025 187 days 188 0
மத்திய நிதிநிலை அறிக்கையில், மாநில அரசுகளுடன் இணைந்து 'சவால் சார்ந்த நடவடிக்கை’ என்பதின் அடிப்படையில் நாட்டின் சிறந்த 50 சுற்றுலாத் தலங்களின் உருவாக்கத்திற்காக நிதி ஒதுக்கப்பட்டது.
அத்தியாவசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு நிலம் வழங்கச் செய்வதற்கான ஒரு பொறுப்பினை மாநில அரசுகள் கொண்டுள்ளன.
இந்த இடங்களில் உள்ள உணவு விடுதிகள் ஆனது, உள்கட்டமைப்புத் திட்டங்களின் உள்கட்டமைப்புக்கான முதன்மை இசைவுப் பட்டியலில் (HML) சேர்க்கப்படும்.
கூடுதலாக, சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக என்று, இந்திய அரசானது இணைய வழி நுழைவு இசைவுச் சீட்டு வசதிகளை நெறிப்படுத்தி, தேர்ந்தெடுக்கப் பட்ட சுற்றுலாக் குழுக்களுக்கு நுழைவு இசைவுச் சீட்டுக் கட்டணத் தள்ளுபடிகளை வழங்கும்.
புத்தரின் வாழ்க்கை மற்றும் காலங்களுடன் தொடர்புடைய இடங்களில் ஒரு சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.