சிறந்த அமெரிக்கப் பொருளாதார மறுமலர்ச்சி தொழில் குழுக்கள்
May 1 , 2020 1922 days 693 0
2019–20 கரோனா வைரஸ் தொற்றுநோயின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தாக்கத்தை எதிர்த்துப் போராட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 'சிறந்த அமெரிக்கப் பொருளாதார மறுமலர்ச்சி தொழில் குழுக்களை' உருவாக்கியுள்ளார்.
அவர்களில் 6 உறுப்பினர்கள் இந்திய-அமெரிக்கச் சமூகத்திலிருந்து சிறந்த அமெரிக்கப் பொருளாதார மறுமலர்ச்சிக் குழுவுக்கு அமெரிக்க ஜனாதிபதியால் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
இதில் கூகிளின் சுந்தர் பிச்சை மற்றும் மைக்ரோசாப்டின் சத்யா நாதெள்ளா, ஐபிஎம்மின் அரவிந்த் கிருஷ்ணா, மைக்ரானின் சஞ்சய் மெஹ்ரோத்ரா, பெர்னோட் ரிக்கார்ட்டைச் சேர்ந்த ஆன் முகர்ஜி மற்றும் மாஸ்டர்கார்டில் இருந்து அஜய் பங்கா ஆகியோர் அடங்குவர்.
டிம் குக், மார்க் ஜுக்கர்பெர்க், எலோன் மஸ்க் மற்றும் பில் ஃபோர்டு ஆகியோர் டிரம்ப்பால் நியமிக்கப்பட்ட அக்குழுவின் மற்ற முக்கிய உறுப்பினர்கள் ஆவர்.
இது வெள்ளை மாளிகையால் ஏற்படுத்தப் பட்ட கரோனா வைரஸ் பணிக்குழுவைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட இரண்டாவது பணிக் குழுவாகும்.
வெள்ளை மாளிகையின் கரோனா வைரஸ் பணிக் குழுவிற்கு அமெரிக்க துணைத் தலைவர் மைக் பென்ஸ் தலைமை வகிக்கிறார்.