நாட்டில் சிறப்பாகச் செயல்படும் காவல் நிலையங்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் தயாரித்துள்ளது.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள அபெர்டீன் இந்தியாவின் சிறந்த காவல் நிலையமாகத் தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் அதைத் தொடர்ந்து குஜராத்தில் உள்ள பாலசினோர் காவல் நிலையம் மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள அஜ்க் புர்ஹான்பூர் காவல் நிலையம் ஆகியவை சிறந்த காவல் நிலையங்களாக தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள தேனி காவல் நிலையம் இந்தப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
இந்த தரவரிசையானது ஒரு காவல் நிலையத்தில் பதிவாகும் குற்றங்களின் எண்ணிக்கையை நிவர்த்தி செய்வது போன்ற அளவுருக்களின் அடிப்படையில் தயாரிக்கப் பட்டுள்ளது.