TNPSC Thervupettagam

சிறந்த காவல் நிலையம்

November 24 , 2021 1269 days 659 0
  • நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களின் தரவரிசை ஆண்டுதோறும் உள்துறை அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது.
  • குற்ற விகிதம் மற்றும் விசாரணை போன்ற அளவுருக்களின் அடிப்படையில் இவை தீர்மானிக்கப் படுகின்றன.
  • மத்திய உள்துறை அமைச்சகத்தின் பட்டியலின் படி, டெல்லியின் வடக்கு மாவட்டத்தில் உள்ள சதர் பஜார் காவல் நிலையம் நாட்டிலேயே சிறந்ததாக உள்ளது.
  • அதைத் தொடர்ந்து ஒடிசாவின் கஞ்சத்தில் உள்ள கங்காபூர் காவல் நிலையம் உள்ளது.
  • ஹரியானாவின் ஃபதேஹாபாத்தில் பட்டுக் கலன் (Bhattu Kalan), வடக்கு கோவாவில் வால்போய் மற்றும் கர்நாடகாவின் ராய்ச்சூரில் உள்ள மான்வி காவல் நிலையம் ஆகியன முறையே மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளன.
  • லட்சத்தீவு ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள காட்மத் தீவு காவல் நிலையம் ஆறாவது இடத்திலும், மகாராஷ்டிராவின் சாங்கிலியில் உள்ள ஷிராலா காவல் நிலையம் ஏழாவது இடத்திலும், தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் உள்ள தொட்டியம் காவல் நிலையம் எட்டாவது இடத்திலும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்