- மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகமானது சிறந்த சுற்றுலாத் தளங்களாக மேம்படுத்துவதற்காக நாட்டின் 12 தொகுப்புகளில் உள்ள 19 தளங்களை அடையாளம் கண்டுள்ளது.
- சமீபத்தில், அந்த அமைச்சகம் இந்த சிறந்த சுற்றுலாத் தளங்களின் பட்டியலில் உலகப் புகழ்பெற்ற காசிரங்காவையும் இணைத்துள்ளது.
- காசிரங்கா தேசியப் பூங்காவானது 2200ற்கும் மேற்பட்ட இந்திய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களுக்கு வாழ்விடமாகத் திகழ்கின்றது.
- உலகின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் இங்கு வாழ்கின்றன.
- மேலும், இது ஒடிசாவில் உள்ள உலகப் பாரம்பரியத் தளமான கோனார்க் சூரிய ஆலயம் மற்றும் குஜராத்தில் உள்ள ஒற்றுமைக்கான சிலை ஆகியவற்றையும் இந்தப் பட்டியலில் இணைத்துள்ளது.
இதர அங்கீகரிக்கப்பட்ட தளங்கள் பின்வருமாறு
- தாஜ்மகால் & பதேக்பூர் சிக்ரி (உத்தரப் பிரதேசம்)
- அஜந்தா & எல்லோரா (மகாராஷ்டிரா)
- ஹூமாயூன் கல்லறை, செங்கோட்டை & குதுப்மினார் (தில்லி)
- கோல்வா (கோவா)
- ஆஜ்மீர் கோட்டை (இராஜஸ்தான்)
- சோம்நாத் மற்றும் தோலவிரா (குஜராத்)
- கஜுராஹோ (மத்தியப் பிரதேசம்)
- ஹம்பி (கர்நாடகா)
- மகாபலிபுரம் (தமிழ்நாடு)
- குமரகம் (கேரளா)
- மகாபோதி கோவில் (பீகார்)