சிறந்தப் பத்திரிக்கைக்கான IPI இந்திய விருதுகள் – 2021
December 1 , 2021 1346 days 659 0
2021 ஆம் ஆண்டிற்கான சிறந்தப் பத்திரிகைக்கான சர்வதேசப் பத்திரிகை நிறுவன விருதானது NDTV தொலைக்காட்சியின் ஸ்ரீனிவாசன் ஜெயின் மற்றும் மரியம் அலாவி ஆகியோருக்கும் Week இதழின் லக்சுமி சுப்ரமணியன் மற்றும் பானு பிரகாஷ் சந்திரா ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் இந்துப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டதாக கூறி முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மீது பதிவு செய்யப்பட்ட, வலுக்கட்டாய மதமாற்ற வழக்குகளின் உண்மைத் தன்மையற்ற நிலை குறித்த அவர்களின் அறிக்கைக்காக வேண்டி ஜெயின் மற்றும் அலாவி ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள அகதிகள் முகாம்களில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை, குறிப்பாக பெண்களைக் கண்டறிதல் குறித்த ஒரு அறிக்கைக்காக The Week இதழின் சுப்ரமணியன் மற்றும் பிரகாஷ் சந்திரா ஆகியோருக்கு இந்த விருதானது வழங்கப் பட்டது.