சிறப்பு ஆயுதங்கள் மற்றும் செயல்தந்திர முறைகளுக்கான குழு (SWAT)
August 15 , 2018 2689 days 877 0
இந்தியாவிலேயே இதுவரையில் எந்தவொரு காவல்துறையிலும் இல்லாததாக, முதன்முறையாக பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக 36 கமாண்டோக்களை உள்ளடக்கிய அனைத்து பெண் சிறப்பு ஆயுதங்கள் மற்றும் செயல்தந்திர முறைகளுக்கான (SWAT- Special Weapons And Tactics) குழுவை டெல்லி காவல்துறை உருவாக்கியுள்ளது.
புதிய அணியில் உள்ள 36 பெண் கமாண்டோக்கள் அனைவரும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களாவர்.
இந்த பெண் கமாண்டோக்கள் ஆகஸ்ட் 15, 2018 சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது செங்கோட்டையிலும், இந்தியா வாயில் பகுதியிலும் பணி அமர்த்தப்படுவர்.
இந்த சிறப்பு ஆயுதங்கள் மற்றும் செயல்தந்திர முறைகளுக்கான குழு டெல்லி காவல்துறை ஆணையரான அமுல்யா பட்நாயக்கின் சிந்தனையாகும்.