1023க்கும் மேற்பட்ட சிறப்பு விரைவு நீதிமன்றங்களை மேலும் இரண்டு வருடங்களுக்கு (ஏப்ரல் 2021 – மார்ச் 2023) மத்திய அரசின் நிதியுதவி பெறும் திட்டமாக தொடருவதற்கு மத்திய அரசானது சமீபத்தில் அனுமதி வழங்கியுள்ளது.
இதில் 389 பிரத்தியேக போக்சோ (பாலியல் ரீதியிலான குற்றங்களிலிருந்து சிறார்களைப் பாதுகாத்தல்) நீதிமன்றங்களும் அடங்கும்.
இதற்கான மத்திய அரசின் பங்கானது நிர்பயா நிதியிலிருந்து வழங்கப்படும்.
விரைவு நீதிமன்றங்கள் குறித்த பரிந்துரையானது 2000 ஆம் ஆண்டில் 11வது நிதி ஆணையத்தினால் வழங்கப்பட்டது.