சிறப்புப் பிரச்சாரம் 5.0 ஆனது நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறை தீர்வுத் துறையை முதன்மைத் துறையாகக் கொண்டு இந்திய அரசாங்கத்தினால் தொடங்கப் பட்டது.
இந்தப் பிரச்சாரம் ஆனது, நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் தூய்மைப் பிரச்சாரங்களை மிகவும் நன்கு நிறுவனமயமாக்குவதையும் நிலுவையில் உள்ளதைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.
2025 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதியன்று நிலவரப் படி, 4.95 லட்சம் தூய்மைப் பிரச்சாரத் தளங்கள் சுவச்சதா (தூய்மை) பிரச்சாரத்தின் கீழ் சுத்தம் செய்யப்பட்டன.
அமைச்சகங்களும் துறைகளும் 130.54 லட்சம் சதுர அடி அலுவலக இடத்தைத் தூய்மை செய்து, குப்பை அகற்றல் மூலம் 377.8 கோடி ரூபாய் வருவாயைப் பெற்றன.
மொத்தம் 5.45 லட்சம் பொதுக் குறை தீர்வு வழக்குகள் தீர்க்கப்பட்டன என்பதோடுமேலும் 17.48 லட்சம் நேரடி கோப்புகள் மறு மதிப்பாய்வு செய்யப்பட்டன என்ற நிலையில், அவற்றில் 7.25 லட்சம் கோப்புகள் நீக்கப்பட்டன.
இந்தப் பிரச்சாரம் ஆனது 12.99 லட்சம் மின்னணு கோப்புகளை மதிப்பாய்வு செய்து, 13,000க்கும் மேற்பட்ட ட்வீட்கள், 200 இன்போ கிராபிக்ஸ் (தகவல் வரைகலை) மற்றும் 36.7 மில்லியன் மக்களை சென்றடைந்ததன் மூலம் குறிப்பிடத்தக்க சமூக ஊடக ஈர்ப்பைப் பெற்றது.