September 11 , 2019
2248 days
819
- கார்பெட் புலிகள் காப்பகத்திற்காக சிறப்புப் புலிகள் படையை (Special Tiger Force - STF) அமைக்க உத்தரகாண்ட் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
- இந்தப் படையானது 85 பணியாளர்களைக் கொண்டிருக்கும். கார்பெட் புலிகள் காப்பகத்தில் பாதுகாப்பின் இரண்டாவது நிலை அடுக்காகச் செயல்பட இப்படை உதவும்.
- STPF ஆனது காப்பகத்தின் எல்லைகளில் அமைந்துள்ள கிராமங்கள் வழியாக வனப் பகுதிக்குள் சட்டவிரோத மனித ஊடுருவலைத் தடுப்பதற்குப் பயனுள்ளதாக இருக்கும்.
- இந்த முடிவானது காப்பகங்களில் இருக்கும் புலிகளுக்கு 3 அடுக்குப் பாதுகாப்பை வழங்குவதற்கான மத்திய அரசின் வழிகாட்டுதல்களின் படி அமைந்திருக்கின்றது.
|
முதல் நிலை
|
வனப் பாதுகாவலர்களினால் மேற்கொள்ளப்படும் வழக்கமான ரோந்துப் பணி
|
|
இரண்டாம் நிலை
|
STPF
|
|
மூன்றாம் நிலை
|
வேட்டையாடுவதைத் தடுப்பதற்காகத் தகவல் சேகரிப்பு நடைமுறைகள்
|
Post Views:
819