சிறார்களுக்கான நிதிநிலை அறிக்கை - மத்தியப் பிரதேசம்
March 16 , 2022 1293 days 601 0
மத்தியப் பிரதேச மாநில அரசு, தனது ஆண்டு நிதித் திட்டத்தின் ஒரு பகுதியாக முதல் முறையாக ‘சிறார்களுக்கான நிதிநிலை அறிக்கையை’ தாக்கல் செய்தது.
இது குழந்தைகளுக்குப் பிரகாசமான எதிர்காலம் இருப்பதை உறுதி செய்யும்.
குழந்தை இறப்பு மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் உள்ளிட்டவற்றிற்கான, குழந்தைகளை மையமாகக் கொண்ட பல திட்டங்களைக் கையாள்வதற்கு வேண்டி, சிறார்களுக்கான இந்த நிதிநிலை அறிக்கை அரசாங்கத்திற்கு உதவும்.