சிறிய டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான வணிகர் தள்ளுபடி விகிதம்
December 17 , 2017 2918 days 1153 0
டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் நோக்கில், பற்று அட்டை, பீம் Unified Payment Interface (UPI) மற்றும் ஆதார் இணைக்கப்பட்ட கட்டண செலுத்து முறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் 2000 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகள் மீதான வணிக தள்ளுபடி விகித கட்டணங்களை அரசே ஏற்றுக் கொள்வதாக மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
2018, ஜனவரி முதல் தேதியிலிருந்து இரண்டு வருட காலத்திற்கு இந்த கட்டண விகிதங்களை வங்கிகளுக்கு ஈடு செய்து விடும் விதமாக அரசே அதனை ஏற்றுக் கொள்ளும்.‘
வணிகர்கள் தமது நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறையும் பணம் செலுத்துவதற்காக கடன் மற்றும் பற்று அட்டைகளை பயன்படுத்தி பணம் செலுத்திய சேவைகளின் பொருட்டு வங்கிகளுக்கு அவ்வணிகர்கள் செலுத்தும் கட்டண விகிதமே வணிகர் தள்ளுபடி விகிதம் எனப்படும்.
இந்தியாவில் ரிசர்வ் வங்கி ஒவ்வொரு அட்டைகள் மூலமான பரிவர்த்தனைக்கான அதிகபட்ச கட்டண விகிதங்களை நிர்ணயிக்கிறது.
இத்தகைய பரிவர்த்தனைகளின் தொழில்துறை அமைப்பு மற்றும் விலை விகிதங்களை ஒரு மத்தியக் குழு ஆராயும்.
இப்பரிவர்த்தனைகள் ஈடுகட்டப்படும் அல்லது திருப்பிக் கொடுக்கப்படும் சலுகைகளின் விகிதங்களுக்கான அடிப்படையாகும்.
இந்த குழு நிதிச் சேவைகள் துறையின் செயலாளர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகத்தின் செயலாளர், இந்திய தேசிய பணம் செலுத்து நிறுவனத்தின் (National Payments Corporation of India - NPCI) தலைமை செயல் அதிகாரி ஆகியோரை உள்ளடக்கியதாகும்.