October 24 , 2021
1371 days
594
- ஜியோரிசா மவ்மெயென்சிஸ் என்று பெயரிடப்பட்ட சிறிய நத்தை இனமானது சமீபத்தில் மேகாலயாவின் மவ்ஸ்மாய் (Mawsmai) என்ற பகுதியில் கண்டறியப்பட்டது.
- இவை சுண்ணாம்புப் பாறைக் குகைகள் அல்லது சுண்ணாம்பு கரைசலால் உருவான சுண்ணாம்புக் கரடு நிலப்பகுதிகளைக் கொண்ட சிறிய வாழிடங்களில் மட்டுமே காணப் படுகின்றன.
- இது போன்ற கண்டுபிடிப்பு மேற்கொள்ளப் பட்டு 170 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இனம் கண்டறியப் பட்டுள்ளது.
- 1851 ஆம் ஆண்டில் தற்போது கண்டறியப்பட்டுள்ள இதே இனத்தைச் சேர்ந்த ஜியோரிசா சரிட்டா என்ற இனமானது கண்டறியப்பட்டது.
- ஜியோரிசா குடும்பத்தைச் சேர்ந்த இனங்கள் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் பரவலாகக் காணப்படுகின்றன.

Post Views:
594