சிறு நீர்ப் பாசனத் திட்டம் குறித்த 6வது கணக்கெடுப்பு
August 31 , 2023 731 days 371 0
ஜல் சக்தித் துறை அமைச்சகம் ஆனது, சிறு நீர்ப்பாசன (MI) திட்டங்கள் குறித்த 6வது கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
23.14 மில்லியன் சிறு நீர்ப்பாசனத் திட்டங்களில், 21.93 மில்லியன் (94.8%) நிலத்தடி நீர் மற்றும் 1.21 மில்லியன் (5.2%) மேற்பரப்பு நீர் சார்ந்த பாசனத் திட்டங்களாகும்.
உத்தரப் பிரதேச மாநிலமானது அதிக எண்ணிக்கையிலான சிறு நீர்ப்பாசனத் திட்டங்களைக் கொண்டுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உள்ளன.
இந்தக் கணக்கெடுப்பானது மத்திய அரசினால் நிதி அளிக்கப்படும் திட்டத்தின் கீழான "நீர்ப்பாசன கணக்கெடுப்புத் திட்டத்தின்" கீழ் நடத்தப் பட்டது.