பேஸ்புக் இந்தியா நிறுவனமானது “சிறு வணிகக்கடன் முன்னெடுப்பு” எனும் புதிய முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
இந்த முன்னெடுப்பானது ‘இன்டிஃபை’ எனும் ஒரு முன்னணி ஆன்லைன் தளத்துடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ளது.
இது சுயாதீன கடன்வழங்குநர் பங்குதாரர்களின் உதவியுடன் பேஸ்புக்கில் விளம்பரம் செய்யும் சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள், விரைவாக கடன் உதவியைப் பெறுவதற்கு வேண்டிய உதவியினை வழங்கும்.
பேஸ்புக் நிறுவனமானது இத்தகைய முன்னெடுப்பினைத் இந்தியாவில் தான் முதன் முறையாகத் தொடங்குகிறது.