மத்திய நேரடி வரிகள் வாரியமானது (CBDT) சிறு வரி செலுத்துவோரின் வெளிநாட்டு சொத்துக்கள்-வெளிப்படுத்தும் திட்ட (FAST-DS) விதிகள், 2026-ஐ அறிவித்துள்ளது, இது 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 அன்று நடைமுறைக்கு வந்தது.
FAST-DS என்பது 2026 ஆம் ஆண்டு நிதிச் சட்டத்தின் அத்தியாயம் IV-இன் கீழ் அறிமுகப் படுத்தப் பட்ட ஒரு முறை விருப்ப வெளிப்படுத்தல் திட்டமாகும்.
இது தகுதியான வரி செலுத்துவோர் குறிப்பிட்ட வெளிப்படுத்தப்படாத வெளிநாட்டு சொத்துக்கள், வெளிப்படுத்தப்படாத வெளிநாட்டு வருமானம் அல்லது அறிவிக்கப் படாத வெளிநாட்டு சொத்துக்களை குறிப்பிட்ட வரி அல்லது கட்டணத்தைச் செலுத்துவதன் மூலம் வெளிப்படுத்த அனுமதிக்கிறது.
தகுதியான சிறு வரி செலுத்துவோர் குறிப்பிட்ட வெளிநாட்டு சொத்துக்கள் அல்லது வருமானத்தை வெளிப்படுத்துவதற்கான சட்டப்பூர்வ பொறிமுறையை வழங்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் வரி செலுத்துவோர் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை மட்டுமே அறிவிப்புகளைச் சமர்ப்பிக்க முடியும்; இந்தத் தேதிக்குப் பிறகு எந்த அறிவிப்பும் ஏற்கப் படாது.