TNPSC Thervupettagam

சிறுகடன் துறையில் நிலுவையில் உள்ள கடன் 2025

June 20 , 2025 15 days 42 0
  • தமிழ்நாட்டில் சிறுகடன் துறையில் ஒரு வங்கிக் கணக்கிற்கு மிக அதிகபட்சச் சராசரி நிலுவைக் கடன் உள்ளது.
  • முதலிடத்தில் உள்ள 10 மாநிலங்களுள், தமிழ்நாட்டில் ஒரு வங்கிக் கணக்கிற்கு அதிக பட்சமாக 31,131 ரூபாய் என்ற நிலுவைக் கடன் உடன் அதிகபட்ச நிலுவைக் கடனைக் கொண்டுள்ளது என்ற நிலையில் அதைத் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு வங்கிக் கணக்கிற்கு அதிகபட்சமாக 30,488 ரூபாய் கடன் நிலுவையில் உள்ளது.
  • சிறு கடன் துறையில், பீகார் தொடர்ந்து மிக அதிக நிலுவைக் கடன் தொகை கொண்ட மாநிலமாக உள்ள ஒரு நிலைமையில் அதைத் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
  • சிறுகடன் வழங்கீட்டு முறை இருப்பைக் கொண்ட மிகப் பழமையான மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாகும்.
  • கடந்த காலத்தில் கடன் அளவு மற்றும் நிலுவையில் உள்ள கடன் தொகை ஆனது பொதுவாக வாடிக்கையாளர்களின் கணக்கு வைத்துள்ள காலம் மற்றும் அவர்களின் கடன் திருப்பிச் செலுத்தும் செயல்திறன் ஆகியவற்றின் காரணியாக இருந்தது என்பதோடு மேலும் ஒவ்வொருப் புதிய கடன் சுழற்சியிலும் ஒரு கடன் பெறுபவருக்கு அதிக கடன் தொகை கிடைக்கும்.
  • எனவே இயல்பாகவே, தமிழ்நாட்டில் வாடிக்கையாளர்களின் கணக்கு வைத்துள்ள காலம் ஆனது மற்ற மாநிலங்களை விட மிக அதிகமாக உள்ளது என்பதோடு இது அதிக சராசரி நிலுவைக் கடன்களை குறிக்கிறது.
  • 2024-25 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) ஆனது 17.23 லட்சம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் தனிநபர் வருமானம் சுமார் 2.78 லட்சம் ரூபாயாக இருந்தது.
  • மேலும் இது தேசிய சராசரியான 1.69 லட்சம் ரூபாயை விட 1.6 மடங்கு அதிகமாகும் என்பதோடு தனி நபர் வருமானத்தின் அடிப்படையில் நான்காவது பெரிய மாநிலமாக தமிழ்நாடு தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
  • இது இம்மாநிலத்தில் ஒரு கணக்கிற்கு நிலுவையில் உள்ள அதிக சராசரிக் கடனைப் பிரதிபலிக்கின்ற, சிறு கடன் பெறுபவர்களின் அதிக கடன் பெறும் ஒரு திறனையும் எடுத்துக் காட்டுகிறது.
  • இருப்பினும், இது 28,285 ரூபாய் மதிப்பிலான அகில இந்திய சராசரிக் கடன் நிலுவைத் தொகையினை விட சற்று அதிகமாகவே உள்ளது.
  • அதிக நிலுவைக் கடன்களைக் கொண்ட முதல் 10 மாநிலங்களில், பீகார், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் கர்நாடகா ஆகியவை சராசரியை விட மிகவும் அதிகமான நிலுவைக் கடன் தொகையைக் கொண்டுள்ளன.
  • இது பெரும்பாலும் சமீபத்திய மாதங்களில் மிகப்பெரிய அளவிலான கடன்கள் அதிக அளவில் வழங்கப்படுவதன் நீடித்தப் போக்கினால் ஏற்படுகிறது.
  • கூடுதலாக, தமிழ்நாட்டில் சிறு கடன் நிறுவனத்தில் (MFI) கடன் வாங்குபவர்களின் அதிகரித்து வரும் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்காக நிறைவுக் காலமானது இந்தப் போக்குக்கு மேலும் பங்களித்துள்ளது.
  • தமிழ்நாட்டில் சிறு கடன் துறையின் மொத்த நிலுவைக் கடன் (GLP) ஆனது 2025 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி 46,689 கோடி ரூபாயாக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்