சில புதிய ஆய்வுகளுக்குப் பிறகு, 2032-ஆம் ஆண்டில் சிறுகோள் 2024 YR4 நிலவுடன் மோதாது என்று நாசா உறுதிப்படுத்தியுள்ளது.
2024 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட இந்தச் சிறுகோள், 2032 ஆம் ஆண்டு டிசம்பர் 22 அன்று நிலவைத் தாக்குவதற்கு சுமார் 3.8–4.3% வாய்ப்பு இருப்பதாக முன்னதாகக் கணிக்கப்பட்டது.
ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கியின் அவதானிப்புகளைப் பயன்படுத்தி அறிவியலாளர்கள் அதன் சுற்றுப்பாதையைத் துல்லியப்படுத்தியுள்ளனர்.
புதிய கணக்கீடுகளின்படி, இந்தச் சிறுகோள் நிலவிலிருந்து சுமார் 21,200 கிலோமீட்டர் பாதுகாப்பான தூரத்தில் கடந்து செல்லும் என்று காட்டுகின்றன.
சுமார் 65 மீட்டர் அகலம் கொண்ட இந்தச் சிறுகோள், புவிக்கு அருகிலுள்ள பொருள் (NEO) என வகைப்படுத்தப்பட்டுள்ளது.