மூன்று நாட்கள் அளவிலான 12வது வேளாண் தலைமை அறிவியலாளர்களின் (MACS) சந்திப்பானது வாரணாசியில் நடைபெற்றது.
2023 ஆம் ஆண்டு வேளாண் தலைமை அறிவியலாளர்களின் (MACS) சந்திப்பின் மீதான கருத்துரு, ஆரோக்கியமான மக்கள் மற்றும் வளமான கிரகத்திற்கான நிலைத்தன்மை மிக்க வேளாண்மை மற்றும் உணவு முறைகள் என்பதாகும்.
இந்த நிகழ்வின் போது, இந்தியா “சிறு தானிய மற்றும் பிற பழங்கால தானியங்கள் பற்றிய சர்வதேச ஆராய்ச்சி முன்னெடுப்பு (MAHARISHI)” என்ற ஒரு முன்மொழிதலைத் தாக்கல் செய்தது.
சர்வதேச சிறு தானியங்கள் ஆண்டான 2023 ஆம் ஆண்டின் போதும் அதற்குப் பிறகும், சிறு தானியங்கள் தொடர்பான ஆராய்ச்சி ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் சிறு தானியங்கள் மற்றும் பிற பழங்கால தானியங்கள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.