இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது திருத்தச் சட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சிறு தானியங்களுக்கான விரிவான தொகுப்பு குறித்த தர நிலைகளைக் குறிப்பிட்டுள்ளது.
இது இந்த ஆண்டின் செப்டம்பர் 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
தற்போது, 2011 ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் (உணவுப் பொருட்களின் தரநிலைகள் மற்றும் உணவுச் சேர்க்கைகள்) ஒழுங்குமுறைகளில் ஒரு சில உணவு வகைகளுக்கான தனிப்பட்ட தரநிலைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
FSSAI அமைப்பானது தற்போது 15 வகையான சிறு தானியங்களுக்கு ஒரு விரிவான தொகுப்பு தரநிலைகளை உருவாக்கியுள்ளது.
ஈரப்பதத்திற்கான அதிகபட்ச வரம்பு, யூரிக் அமில உட்கூறு, தேவையற்ற பொருட்கள், மற்ற உண்ணக் கூடிய தானியங்கள், குறைபாடுகள், அந்துப்பூச்சிகள் தாக்கிய தானியங்கள் மற்றும் முதிர்ச்சியடையாத மற்றும் உலர்ந்த தானியங்கள் போன்ற 8 தர அளவுருக்களை அவை குறிப்பிடுகின்றன.