சிறுத்தைகளைக் காண்பதற்கான இந்தியாவின் மிகப்பெரிய சுற்றுலாப் பூங்கா
June 30 , 2024 328 days 413 0
சிறுத்தைகளைக் காண்பதற்காக என்று தென்னிந்தியாவின் முதல் மற்றும் நாட்டின் மிகப்பெரிய சுற்றுப் பயணப் பூங்காவானது பன்னேர்கட்டா உயிரியல் (BBP) பூங்காவில் திறக்கப்பட்டுள்ளது.
தற்போது இதற்காக எட்டு சிறுத்தைகள் திறந்தவெளி வனப் பகுதியில் விடப்பட்டு உள்ளன.
BBP பூங்காவானது 2004 ஆம் ஆண்டில் பன்னேர்கட்டா தேசியப் பூங்காவில் இருந்து பிரிக்கப் பட்டு, கர்நாடகாவின் மிருகக்காட்சி சாலை ஆணையத்தின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இது உயிரியல் பூங்கா, சுற்றுப் பயணப் பூங்கா, வண்ணத்துப் பூச்சி பூங்கா மற்றும் மீட்பு மையம் உள்ளிட்ட பல பிரிவுகளை உள்ளடக்கியது.