TNPSC Thervupettagam

சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடு

January 11 , 2020 2004 days 1190 0
  • சிறுபான்மையின கல்வி நிறுவனங்கள் "கல்வியில் சிறந்து விளங்குவதற்கு" நல்ல தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமிப்பதற்காக “தேசிய நலன்" கருதி ஒரு ஒழுங்குமுறையை அறிமுகப்படுத்த மாநில அரசிற்கு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
  • 2008 ஆம் ஆண்டின் மேற்கு வங்க மதரஸா பணி ஆணையச் சட்டம் செல்லுபடியாகும் என்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வெளி வந்துள்ளது.
  • அரசு உதவி பெறும் மதரஸாக்களில் ஆசிரியர்களை நியமிக்கும் செயல்முறையானது ஒரு ஆணையத்தால் மேற்கொள்ளப்படும் என்று இந்த சட்டம் கட்டாயப் படுத்துகின்றது. இந்த ஆணையத்தின் முடிவு அனைவரையும் கட்டுப்படுத்தும்.
  • சிறுபான்மை நிறுவனங்கள், தங்கள் விருப்பப்படி கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்கும் நிர்வகிப்பதற்கும் அரசியலமைப்பின் 30வது பிரிவின் கீழ் ஒரு அடிப்படை உரிமையைப் பெற்றுள்ளன.
  • இருப்பினும், மாநில அரசினால் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளை அந்த நிறுவனங்களால் புறக்கணிக்க முடியாது.
  • எவ்வாறாயினும், இந்த ஒழுங்குமுறைச் சட்டமானது சிறப்பான தரத்தை உறுதி செய்வதோடு சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்கும் நிர்வகிப்பதற்கும் உள்ள அடிப்படை உரிமையைப் பாதுகாத்தல் என்ற இரட்டை நோக்கங்களைச் சமநிலைப்படுத்த வேண்டும்.
  • இதற்காக, உச்ச நீதிமன்றம் கல்வியை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துள்ளது:
    • மதச்சார்பற்ற கல்வி
    • கல்வி என்பது “மத அல்லது மொழியியல் சிறுபான்மையினரைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது அல்லது அதனைக் கையாள்வது” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்