இந்தியத் தேர்தல் ஆணையமானது (Election Commission of India - ECI) மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் சிறைக் கைதிகளுக்கு வாக்குரிமை கிடையாது என்று தில்லி உயர் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.
வாக்களிக்கும் உரிமையானது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 62ன் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு சட்ட ரீதியான உரிமை என்று இந்தியத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மேலும் வாக்களிக்கும் உரிமை ஒரு சட்ட ரீதியான உரிமையாக இருப்பது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்று சட்டமும் கூறுகின்றது.
ECI ஆனது சிறைக் கைதிகளுக்கு வாக்குரிமையை மறுக்கும் அனுகுல் சந்திர பிரதான் “எதிர்” மத்திய அரசு (1997) என்ற வழக்கின் தீர்ப்பையும் மேற்கோள் காட்டியது.