TNPSC Thervupettagam

சிறைத் துறை சீர்திருத்தங்கள்

February 9 , 2020 1989 days 638 0
  • உச்ச நீதிமன்றக் குழுவானது பல்வேறு சிறைத் துறை சீர்திருத்தங்களைப் பரிந்துரைத்துள்ளது.
  • இந்திய உச்ச நீதிமன்றமானது சிறை நிர்வாகம் மற்றும் நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக முன்னாள் நீதிபதியான அமிதவ் ராய் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவை 2018 ஆம் ஆண்டில் அமைத்திருந்தது.
  • ‘சிறைச் சாலைகள்/அதில் வைக்கப்பட்டுள்ள நபர்கள்’ என்பது இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் பட்டியல் IIன் கீழ் உள்ள ஒரு மாநிலக் கூறாகும்.

பரிந்துரைகள்

  • ஒவ்வொரு புதிய கைதியும், அவரது குடும்ப உறுப்பினர்களுடன் உரையாட ஒரு நாளைக்கு ஒரு முறை அழைத்துப் பேசுவதற்காக இலவச தொலைபேசி வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்.
  • நவீன சமையல் வசதிகள், அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக
    சிற்றுண்டிச் சாலையை ஏற்படுத்த வேண்டும்.
  • வழக்கு விசாரணைகளுக்காகக் காணொளியைப் பயன்படுத்த வேண்டும்.
  • ஒவ்வொரு 30 கைதிகளுக்கும் குறைந்தபட்சம் ஒரு வழக்கறிஞர் இருக்க வேண்டும்.
  • சிறிய வகைக் குற்றங்களைப் பிரத்தியேகமாக கையாளுவதற்காக சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்