TNPSC Thervupettagam

சிற்றாமைகளுக்கு செயற்கைக்கோள் கண்காணிப்புக் கருவி பொருத்தல்

January 12 , 2026 2 days 16 0
  • சென்னையில் ஒரு முன்னோடி முயற்சியாக, சென்னை கடற்கரைகளில் சிற்றாமைகளுக்கு செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கும் கருவிகள் பொருத்தும் பணி தொடங்கியது.
  • முட்டையிடுவதற்காக கரைக்கு வந்த இரண்டு சிற்றாமைகளுக்கு (ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள்) செயற்கைக்கோள் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டு மீண்டும் கடலில் விடப்பட்டன.
  • 2025–2027 வரையிலான இந்த இரண்டு ஆண்டு காலத் திட்டம், ஆமைகளின் இயக்கம் மற்றும் கூடு கட்டுதலைப் பற்றி ஆய்வு செய்ய செயற்கைக்கோள் தொலை அளவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
  • இந்தத் திட்டம் இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) மற்றும் வண்டலூரில் உள்ள மேம்பட்ட வனவிலங்குப் பாதுகாப்பு நிறுவனம் (AIWC) ஆகியவற்றால் செயல்படுத்தப்படுகிறது.
  • இந்த ஆய்வு தமிழ்நாட்டில் உள்ள சென்னை கடற்கரை மற்றும் காவிரி டெல்டா பகுதிகளை உள்ளடக்கும்.
  • மொத்தம் 10 ஆமைகளுக்கு செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்கக்கூடிய கருவிகள் பொருத்தப்படும் என்பதோடு மேலும் 1,000 ஆமைகளுக்கு துடுப்புகளில் அடையாளக் குறியிடப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்