பிரபலமான சிற்றுண்டிகளின் ஊட்டச் சத்து உள்ளடக்கம் குறித்த ஒரு விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக இந்திய சுகாதார அமைச்சகமானது ஒரு தேசியப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
அதிகரித்து வரும் வாழ்க்கை முறை தொடர்பான நோய்களை எதிர்த்துப் போராட என, தினசரி இந்தியச் சிற்றுண்டி உணவுகளில் மறைக்கப்பட்ட சர்க்கரைகள், எண்ணெய்கள் மற்றும் மாறுபக்க கொழுப்புகளை வெளிப்படுத்துவதில் இந்த பெரும் முன்னெடுப்பு கவனம் செலுத்துகிறது.
நாக்பூரில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகமானது (AIIMS) இதற்கென ஒரு மாதிரித் திட்டத்தைத் தொடங்கியது.
சமோசாக்கள், பக்கோடாக்கள், தேநீர் மாசில்லுகள் /பிஸ்கட்கள் மற்றும் ஜிலேபிகள் போன்ற பிரபலமான இந்திய சிற்றுண்டிகள் அவற்றின் அதிக சர்க்கரை, எண்ணெய் மற்றும் மாறுபக்க - கொழுப்பு உள்ளடக்கத்திற்காகப் பிரபல மூலமாக உள்ளன.
இந்தச் சிற்றுண்டி மூலப்பொருட்களானது உடல் பருமன், நீரிழிவு நோய், இதய நோய், பக்கவாதம் மற்றும் புற்றுநோயுடன் தொடர்புடையவையாக உள்ளன.
லான்செட்டின் அறிக்கையின் படி, 2050 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் சுமார் 450 மில்லியன் மக்கள் அதிக எடை அல்லது பருமன் உள்ளவர்களாக இருக்கலாம் என்றும், சீனாவிற்குப் பிறகு உலகளவில் இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கும் என்றும் எச்சரிக்கிறது.