TNPSC Thervupettagam

சிலிக்கா ஏரி பற்றிய வருடாந்திர ஆய்வு

February 7 , 2022 1418 days 643 0
  • சிலிக்கா மேம்பாட்டு ஆணையமானது, அண்மையில் சிலிக்கா ஏரியில் வருடாந்திரக் கணக்கெடுப்பை நடத்தியது.
  • இது சிலிக்கா ஏரியில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பற்றிய ஒரு கணக்கெடுப்பு ஆகும்.
  • நாட்டில் உள்ள ஒட்டு மொத்த கடல் புல் பரவலில் 33 சதவீதத்திற்கும் அதிகமானவை இந்த ஏரியில் உள்ளது என இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
  • கடல்புல் என்பது நீருக்கடியில் உள்ள தாவரமாகும்.
  • இவை கடலில் அல்லது கடல்பரப்பிற்கு அருகில் உள்ள பகுதிகளில் காணப் படுகின்றன.
  • இங்கு ஐந்து வகையான கடல் புல் இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
  • அவை ஹாலோபிலா பெக்காரி, ஹாலோபிலா ஓவேட், ஹாலோபிலா ஓவாலிஸ், ஹாலோடுல் பினிஃபோலியா மற்றும் ஹோலோடூல் யூனினெர்விஸ் ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்