இந்தியாவின் சில்லறைப் பணவீக்கம் ஆனது 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 0.25% ஆகக் குறைந்துள்ளது என்பதோடுஇது வரலாற்றில் மிகவும் குறைந்த அளவைக் குறிக்கிறது.
இது 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த பணவீக்க விகிதமாகும் என்பதோடுமேலும் தற்போதைய CPI தொடரில் மிகக் குறைவாகும்.
சரக்கு மற்று சேவை வரி விகிதக் குறைப்பு, சாதகமான அடிப்படை விளைவு மற்றும் உணவுப் பொருட்களில் பணவீக்கம் குறைதல் ஆகியவை இந்தச் சரிவுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தன.
செப்டம்பர் மாதத்தில் 1.4% குறைவினைத் தொடர்ந்து, 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் உணவு மற்றும் பானங்களின் பணவீக்கம் 3.7% குறைந்துள்ளது.
1.7% ஆகக் குறைந்த ஆடை மற்றும் காலணிகளைத் தவிர, பிற பெரும்பாலான நுகர்வோர் விலைக் குறியீட்டு வகைகளில் கடந்த ஆண்டை விட அதிகப் பணவீக்கம் பதிவாகின.
எரிபொருள் மற்றும் மின் விளக்குகள் பணவீக்கம் 2% ஆக உயர்ந்தது என்பதோடுமேலும் வீட்டு வசதிகள் மீதான பணவீக்கம் 3% ஆக அதிகரித்தது.
இதரப் பணவீக்கம் ஆனது 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சுமார் 5.7% ஆக அதிகரித்தது.