சில்லுகள் பொருத்தப்பட்ட இணையவழிக் கடவுச்சீட்டு அறிமுகம்
May 11 , 2025 16 hrs 0 min 23 0
இந்திய அரசானது, நாடு முழுவதும் சில்லுகள் பொருத்தப்பட்ட இணையவழிக் கடவுச் சீட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு சோதனை முன்னெடுப்பாகத் தொடங்கப் பட்டது.
இந்த இணைய வழிக் கடவுச்சீட்டுகள் அதில் பொதிக்கப்பட்ட ரேடியோ அதிர்வெண் அடையாளம் காணும் (RFID) சில்லுகள் மற்றும் அலை வாங்கிகள் மூலம் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன.
இந்தச் சில்லுகள் கடவுச் சீட்டுகள் வைத்திருப்பவரின் உயிரியளவியல் தகவல்கள் உள்ளிட்ட தரவுகளை சேமிக்கும்.
ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் ஐக்கியப் பேரரசு போன்ற சில நாடுகள் ஏற்கனவே உயிரியளவியல் தகவல் அடிப்படையிலான பயண ஆவணங்களைக் கொண்டுள்ளன.