சிவகாசி-கோவில்பட்டி தீப்பெட்டிகளுக்குப் புவிசார் குறியீடு
July 12 , 2025 12 days 90 0
சிவகாசி-கோவில்பட்டி தீப்பெட்டிகளுக்குப் புவிசார் குறியீடு வழங்க கோரி கோவில் பட்டி தேசிய சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் விண்ணப்பித்துள்ளது.
இந்த சிவகாசி/கோவில்பட்டி தீப்பெட்டிகள் சிவகாசி தீப்பெட்டிகள் என குறிப்பிடப் படுகின்றன.
சிவகாசி தீப்பெட்டி என்ற சொல் ஆனது 100 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப் பட்டு வருகிறது.
இது சாத்தூர் மற்றும் விருதுநகர் தாலுகாக்கள் (விருதுநகர் மாவட்டம்), கோவில்பட்டி மற்றும் எட்டயபுரம் தாலுகாக்கள் (தூத்துக்குடி மாவட்டம்), சங்கரன்கோவில் தாலுகா (தென்காசி மாவட்டம்) ஆகிய இடங்களில் தயாரிக்கப்படுகிறது.
சிவகாசி தீக்குச்சியின் சிம்புகள்/குச்சிகள் ஆனது இலவ மரம் (இந்திய மலபாரிகா பாப்லர்) மற்றும் காட்டரசு மரம் (ஆஸ்பென்) உள்ளிட்ட உள்ளூரில் கிடைக்கும் மென் மரங்களிலிருந்து துல்லியமான வடிவில் வெட்டப்படுகின்றன.
இந்தத் தீக்குச்சியின் தலை அமைப்பானது அறிவியல் பூர்வமாக அளவீடு செய்யப்பட்ட பொட்டாசியம் குளோரேட் (ஆக்ஸிஜனேற்றியாக என்று), ஆண்டிமனி ட்ரைசல்பைடு (உராய்வு பற்றுத் திறனுக்காக வேண்டி), சல்பர் (சுடர் நீடித்து எரிவதற்காக) மற்றும் கட்டுப்படுத்தப் பட்ட பற்றவைப்பு மற்றும் குறைந்தபட்சத் தீப்பொறியை நன்கு உறுதி செய்கின்ற கேசீன் பசைப் பொடி அல்லது அரபிக் பசை போன்ற உயர்தர பிணைப்புக் காரணிகள் ஆகியவற்றின் கலவையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.